இடுகைகள்

கவிஞர் நரனின் உப்பு நீர் முதலை

படம்
பருத்திக்காடு பருத்தி அறுவடை முடிந்த கரிசல் வெளியில் பாடல் காட்சியொன்றின் படப்பிடிப்பு நடக்கிறது பாடல் காட்சியில் நடனமாடும் துணைநடிகையின் கால்களுக்கிடையே பூத்திருக்கிறது பருத்தியொன்று காட்சியில் அவள் நடனமாடும்போது தாள லயங்களுககு ஏற்றவாறு அப்பருத்தியும் ஆடுகிறது உணவு வேளை இடைவேளையின்போது நனைந்த பருத்தியைப் பறித்துவிட்டு வேறொன்றைப் பூக்கச் செய்கிறாள் காலிடையில் படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அவளோடு பெயர்ந்து செல்கிறது ஒரு பருத்திக்காடு கானகம் புத்தகத்தின் 73ம் பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது அதில் தான் தம் கரும்புரவியை மேய்ந்து வரும்படிக்கு அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன் கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான் வாசகன் குதிரையும் வீரனும் ஒருவரையொருவர் தேடி அலைகின்றனர் கிழிந்து விழுந்த கானகத்தில் உப்பளம் உப்பளத்தில் அழுதுகொண்டிருந்தாள் ஒருவன் அவள் அழுகையைப் பிரித்து பிரித்து பாத்தி கட்டிக்கொண்டிருந்தான் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன அவள் அழுகையை வெவ்வேறு ஊர்களுக்கு ஏற்றிச் செல்லவிருக்கும் லாரிகள் ... லாரிகள் ... முதலை நீர்த்த...

சிந்திக்க வைக்கும் நம் நகுலன்

அலைகளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை கடல் இருக்கிற வரை. -நகுலன்

பொறாமை

பொறாமை  கத்தியைத் தூக்கிக் கொண்டு என்னோடு சண்டையிட  வந்தது. நான் அதனோடு  நடனமிட்டேன் அது வனமிருகத்தின்  வாயால் அர்த்தமற்ற  சொற்களை  பீய்ச்சியடித்தது நான் அதனு...

பிளாட்பார மரணங்கள்

பின் திரும்பியே வராத பிள்ளையின் அம்மாவிற்கு அவ்வப்போது காணநேரிடும் பைத்தியக்காரர்களின் பிளாட்பார மரணங்கள் பின்னிரவு நெடுங்காய்ச்சலை பரிசளிக்கின்றன. - பா. திர...

ஒரு மணல் மாத்திரை

ஒரு நூலிடை அவகாசம்தான் உன்னை நெருங்க. யுகமோ தள்ளித்தள்ளிப்போகிறது அதற்குள் ஒரு நெல் வயல் முற்றட்டும். தாகமுற்றவன் நிலநீரை பலமிடறு அருந்தட்டும். அந்த புகைவண்டி ...