தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்
1) சுவரும் இல்லாமல் ஆணியும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் தொங்குகிறது கண்ணாடி நீ சிரிக்கிறாய் உன் எதிரில் இருப்பவனும் சிரிக்கிறான். 2) ஒயின் அருந்திய கோப்பையின் அடியில் எஞ்சி இருக்கும் நூற்றண்டுக்கு முந்திய் திராட்சை கொடியின் சிறு பகுதி 3) கிளையை பிடித்து தொங்காதே. கிட்டத்தட்ட 127 ஆண்டுகள் பழையது இந்த மரம் . ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை. 4) குட்டி தவளைகள் குட்டி பூச்சியை உன்கிறது. குட்டியான வாயால் குட்டியான சப்தங்களை எழுப்புகின்றது -தம் குட்டியான கால்களால் குட்டியான உயரத்தை குட்டியான நீளத்தை தாவுகின்றன . பெரிய தவளைகளும் அப்படியே யாவற்றிலும் பெரிய .... 5) அவன் சிலநேரம் காற்றில் அப்படியும் இப்படியுமாய் வாளை வீசும்போது அம்மரத்திலிருந்து ஓரிரு இலைகள் உதிர்கின்றன. 6) எதிர்பார்த்தல் எதுவுமின்றி நூறாண்டுக்கு பின்வருபவர்களுக்கும் உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் . நூறாண்டுக்கும் முன் யாரோ புதைத்து வைத்த ஒயின் பீப்பாயை மண்ணிலிருந்து தோண்டி எடுக்கும் போது . 7) பச்சைநிற வயற்பரப்பிலிருந்து பச்சைநிற துண்டு வயற்பரப்புகள் ஆகாசம் நோக்கி பற...