இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிகோனர் பர்ரா

ஆமாம் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உண்மைகள் புத்தகங்களில் இருப்பதில்லை. நீங்கள் அவற்றை கழிவறை சுவர்களில் வாசிக்கலாம். மக்களின் குரலே கடவுளின் குரல் * இதை நிச்சயமாக புத்தகத்தில் தான் வாசித்தேன். மூலம்: நிகோனர் பர்ரா தமிழில்: வே.நி.சூர்யா

ஒரு ஆப்பிளின் டைரியிலிருந்து

படம்
0 0 நானொரு ஆப்பிள் என்றுணர்ந்த போது கத்திகளை விட வாய்களுக்குதான் அதிகம் பயந்தேன் ஏனெனில் அவைகள்தான் வடிவமின்றி என்னை தாராளத்தில் கொய்கின்றன நானொரு ஆப்பிளாக பிறந்திருக்க கூடாது இத்தனை சிவப்பு இத்தனை மதிப்பார்ந்த விலை இத்தனை நுண்ணிய விதைகளென சந்தையில் அத்தனை பரபரப்போடு திருப்பி பார்க்கிறவர்கள் என்னை எடுப்பவர்களாக இல்லை என்னை காஷ்மீரா என்று கேட்கிறார்கள் கடைக்காரர் ஆமாமென்கிறார் எனக்கு கத்த வேண்டும் போல் இருக்கிறது திறந்த மாதுளையே அதான் உனக்கு பற்கள் இருக்கிறதே அத்தனையும் மிளிர மிளிர சப்தமிடுவேன் எனக்காக சப்தமிடு கடைக்காரன் பொய் சொல்கிறான் நான் காஷ்மீர் இல்லை நான் இன்னும் பழுக்க கூட இல்லை மாதுளையே சப்தமிடு உன் செம்பற்களில் சாறுகளை ஈக்கள் அருந்தாது நீ சப்தமிடு உரக்க சப்தமிடு நான் இனிக்க மாட்டேன் நான் காஷ்மீர் இல்லை நான் இந்த தேசம் இல்லை நான் ஆப்பிளே இல்லை..! 01 உன்னை மாதிரி ஒரு பழுத்த ஆப்பிளை நான் பார்த்ததேயில்லை உன்னை மாதிரி சிவந்த ஆப்பிள் என் கூடையில் இருப்பது எனக்கு பெருமையாய் இருக்கிறது உன்னை நான் உண்ணப்போவதில்லை உன்னை குளிர் பெட்டிக்குள் வை...