இரா.தயாளன் கவிதைகள்

ஹைக்கூ
••••••••••••••••••••


1.
போராட்ட நடுவில்
பாப்பா இறுக்குகிறாள்
தன் பொம்மையை.
*
2.
மழைத்துளி விழுந்து
ததும்புகிறது
வானம்.
*
3.
பாப்பா தடவிக்கொடுக்க
தலையை நீட்டுகிறது
பூனை.
*
4.
மூடப்பட்ட கதவு
மீண்டும் மீண்டும் முட்டும் பூனை
வீட்டினுள் குட்டிகள்.
*
5.
பூனையின் மியாவ் சப்தத்தை
புரிந்துகொண்டு
புன்னகைக்கிறாள் பாப்பா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்