பாலைநிலவன் கவிதைகள்

1)
பகல் இரவுகளின் உயிர் மின்ன       பரிதவித்து நிலைத்து நின்ற .            விழிகளை                                              மலர்போல கொண்டு செல்கிறேன் ஆசுவாசமற்றுச் சொட்டும்                கண்ணீரின் உப்பாகிறது                 பிரயாணம்.                                                    எல்லா கண்களிலும்                                 பாம்பின் தோல் போலவே                         சிசுவின் கன்னம்போலவோ      ஏதோவொன்று                                                பகல் இரவுகளின்                                     உயிராய் மின்னுகிறது                                   பிறகு                                               கண்விழிக்காத                                          இரண்டு எலிக்குஞ்சுகளாகிவிடுகின்றன விழிகள்.

2)

கனிந்த ஆரஞ்சுப்பாதங்களில்.     ஒளிமணிகள் சிந்த                               மேடையை பெருநிலமாக்கி                    ஆகாசம் அதிர                                             உடலை சுழித்து வளைத்து                     வியர்த்து வீழ்கிறாள்                               வாழ்வின் களி நடனமே               கொண்டாட்டம் என்றறிந்த சிறுமி.       அவள் சலங்கையொலியின் கீழ்.           நடுங்கி
ஒளிந்து கொண்டிருந்தது காலம்     குழந்தைகளை முதிர்க்க வைக்கும்.   அதன் பயங்கரப் பிராணனில்             அக்கணம்                                                           ஒரு பல்லி விழுந்தது.

3)
பேரமைதி நிரம்பிய உன் விரல்களுக்கு
இனி திரும்ப இயலாது.                               இனிப்பு ஊறிய விரல்கள்                         கேரட் முளைக்காத காலங்களில் முயல்களுக்கு ஆகாரமாகக்கூடும் சாயங்காலத்தின் மென் ஒளியால்       விரல்கள் மஞ்சள் பனிய         இளஞ்சிவப்பாய் பூத்திருந்தும்             அவிந்து கிடக்கிறது நிலம்.               விரல்களை தாய் போல நேசிக்கிறேன்       ஒரு போதும் கை விட திருப்பவளின் உவமையாக இருந்தும்.                              கடவுள் போலக் கைவிடுகிறாய்                     ஒரு நாயைக் கைவிடும் போது.             நமக்கு மிஞ்சுவது                                       புராதன சோற்றுத் தட்டும்                     கொஞ்சம் அழுகிய பருக்கைகளும்     கழுத்தை அழுத்தும் சங்கலியுமென்று  நீ அறிவாயா     நோயாளிகள் ஊதுகின்ற காற்றில்     நிரம்பி மிதக்கும் நிலத்தில்               விரல்களை கொலை ஆயுதமாக மாற்றக்கூடாது தோழி                               முடிவின் பொழுத்துக்காக               விரல்களை பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் கேரட்டுகளை போலேனும் .                          கால காலமாய்                                   மனுஷர்கள் தங்களுக்கென சிருஷ்டித்த
கோபுரங்கள் சாய்கையில்
தாயின் ரத்ததத்தை போல
விரல்களை நீ பெய்ய வேண்டும்.       மறுபடியும்                                                 அழுதழுது செப்பனிடுவேன்               தாய்போல கை விடாதிருக்கும் விரல்களை பிறகு                                         இரத்தத்தையே ஆகாரமாக்கி அன்பளிப்பதற்கு                           அண்டமெங்கும் கைவிடப்பட்ட                 நாய் போல அலைவேன்                           தாயின் முலைகளோடு.

4)
ஓவியத்தை புணருபவனின்
தலைக்குமேல் பறக்கிறது கழுகு
அவன் மரித்த பின்
குடல்களை பாம்பென்று
கருதிப் புசிக்கிறது அது.

5)
கொலை செய்யபட்ட உடலோடு நாடமாடித்திரியும் ஒருவனை.         உங்களுக்கு அறிமுப்படுத்துகிறேன் பாறையில் விழுந்து கிடக்கும்         பறவையின் பினமொன்றினை.           முகர்ந்து திரும்புவீர்கள்                       மத்தியான வெய்யில.                               உங்கள் தலையில் இறங்கி               மனத்தைக் கொன்றுகொண்டிருக்கும்.பிறகு.

6)
எல்லோரையும் இழந்த.
கைவிடப்பட்ட சிறுமி                                     தன் சொந்த ஊரைவிட்டு.           தெருவைவிட்டு                                     சின்னசிறு வீட்டைவிட்டு                             தன் அம்மாவின்                                             மூச்சுக்காற்றின்  நிலத்தை விட்டு பிரித்தெடுக்கபட்டபின்                               அவள் விளையாடி விட்டுச்சென்ற இடம் ரத்தம் பாரித்து வீங்கியுள்ளது .   அவள் நிழலில் சுருக்கிட்டுள்ள வெளி நாக்கு தள்ளி விறைத்துள்ளது.                  அதை காணும் கண்களில்                           பெட்ரோல் நெருப்பு                                     கொழுந்து விட்டு எரிகிறது.                     விறைப்பான லத்தியை                       சுமந்துள்ள புதிய இடம்                               அரக்குப் பகலில்                                       அவளுக்கு தெரியாத மனிதர்களையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது                காலம் இடம் சூழலில் அவள் பிஞ்சுப்பாதங்கள் நிலை தடுமாறி. நிலை தடுமாறி           உள்ளேயும் வெளியேயும் வீழ்கிறாள் ராவெல்லாம் கன்மலைகள் வெடிக்க   அவள் ஆன்மா அம்மாவென அழைக்கும்     ஒரே ஒரு தொனியில்
சில பகல்கள் உருக                                     பல இரவுகள் கரு்க.                                       அவள் வாழ்ந்த                                               பால்ய இடத்தின் மறைவிட நிழல் பதுங்கிப்பதுங்கி.                                       நாய்களுடன் சேர்ந்து உளையிடுகிறது கைவிடப்பட்ட சிறுமி  அம்மாவின் நிழலில்                     பயந்து நடுங்கி மெழுகிக் கரைகிறாள்    தவழ்ந்து வந்தணைக்கிறது அம்மா என்ற பெயருள்ளதொரு குளிர்நிழல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்