இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

1) நீர் தெளித்து விளையாடுதல் முன் பின் பழக்கம் இல்லாத பயண வழி உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு கை கழுவப் போனேன். சாதாரண உயரத்தில் இரண்டு வாஷ்பேசின்களும் மிகக்குறைந்த உயரத்தில் ஒரு வாஷ்பேசினும் இருந்தன. கை கழுவும்போது காரணம் தெரிந்து விட்டது. குள்ள வாஷ்பேசின் முன் இல்லாத குழந்தையின் மேல் செல்லமாக தண்ணீர் தெளித்து விளையாடி விட்டு விரைவாக வெளியே வந்து விட்டேன். 2) குழந்தைகளின் ஜன்னல்கள் இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட். உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா. வீடு இங்கேதான் இருக்கிறதாம். இதெல்லாம் ஒரு காரணமா? 3) ஒரே முறை தான் கலவரம் பழக்கப்பட்ட ஊரின் முகம் மாறிப் போயிற்று. தினம் போகும், வரும் சாலையில் டயர்களை எரித்துக் கொண்டிருந்தார்கள் கோஷம் போட்டபடி. தற்காலிக உற்சாகத்தில், பாதையின் குறுக்கே விழ மரத்தை அறுத்தது ஒரு கும்பல். அப்போதுதான் முதல் தடவையாய் அந்த மரத்தை அங்கு பார்த்தேன். 4) விளையாட்டுப் பிள்ளைகள் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன அந்தப் பூங்காவில். ஒன்று ஊஞ்சலில் நி...

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

1) சுவரும் இல்லாமல் ஆணியும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் தொங்குகிறது கண்ணாடி நீ சிரிக்கிறாய் உன் எதிரில் இருப்பவனும் சிரிக்கிறான். 2) ஒயின் அருந்திய கோப்பையின் அடியில் எஞ்சி இருக்கும் நூற்றண்டுக்கு முந்திய் திராட்சை கொடியின் சிறு பகுதி 3) கிளையை பிடித்து தொங்காதே. கிட்டத்தட்ட 127 ஆண்டுகள் பழையது இந்த மரம் . ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை. 4) குட்டி தவளைகள் குட்டி பூச்சியை உன்கிறது. குட்டியான வாயால் குட்டியான சப்தங்களை எழுப்புகின்றது -தம் குட்டியான கால்களால் குட்டியான உயரத்தை குட்டியான நீளத்தை தாவுகின்றன . பெரிய தவளைகளும் அப்படியே யாவற்றிலும் பெரிய .... 5) அவன் சிலநேரம் காற்றில் அப்படியும் இப்படியுமாய் வாளை வீசும்போது அம்மரத்திலிருந்து ஓரிரு இலைகள் உதிர்கின்றன. 6) எதிர்பார்த்தல் எதுவுமின்றி நூறாண்டுக்கு பின்வருபவர்களுக்கும் உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் . நூறாண்டுக்கும் முன் யாரோ புதைத்து வைத்த ஒயின் பீப்பாயை மண்ணிலிருந்து தோண்டி எடுக்கும் போது . 7) பச்சைநிற வயற்பரப்பிலிருந்து பச்சைநிற துண்டு வயற்பரப்புகள் ஆகாசம் நோக்கி பற...

இரா.தயாளன் கவிதைகள்

ஹைக்கூ •••••••••••••••••••• 1. போராட்ட நடுவில் பாப்பா இறுக்குகிறாள் தன் பொம்மையை. * 2. மழைத்துளி விழுந்து ததும்புகிறது வானம். * 3. பாப்பா தடவிக்கொடுக்க தலையை நீட்டுகிறது பூனை. * 4. மூடப்பட்ட கதவு மீண்டும் மீண்டும் முட்டும் பூனை வீட்டினுள் குட்டிகள். * 5. பூனையின் மியாவ் சப்தத்தை புரிந்துகொண்டு புன்னகைக்கிறாள் பாப்பா.

பாலைநிலவன் கவிதைகள்

1) பகல் இரவுகளின் உயிர் மின்ன       பரிதவித்து நிலைத்து நின்ற .            விழிகளை                                              மலர்போல கொண்டு செல்கிறேன் ஆசுவாசமற்றுச் சொட்டும்                கண்ணீரின் உப்பாகிறது                 பிரயாணம்.                                                    எல்லா கண்களிலும்                                 பாம்பின் தோல் போலவே                         சிசுவின் கன்னம்போலவோ      ஏதோவொன்று                ...