நரன் கவிதைகள்

தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் வீட்டைச் சுத்தப்படுத்தி குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் . பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் . தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் தெருவைச் சுத்தப்படுத்தி குப்பைகளை . நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான் நகரத்தில் நோய்த் தொற்று அதிகம் . கொசு மருந்து அடிக்க தன்னிடமே ஒப்புதல் வாங்கிக் கொள்கிறான் . தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பின் நகரைச் சுத்தம் செய்து கப்பலிலேற்றி அருகிருக்கும் நாட்டில் கொண்டு போய்க் கொட்டுகிறான் . அதற்குத் தானே டெண்டர் விட்டுத் தானே டெண்டர் எடுத்துக் கொள்கிறான். *** ஒரு காட்டு மரம் அது தன்னைத் தானே விதைக்கும். தனக்குத் தானே நீரூற்றித் தன்னைத் தானே வளர்க்கும். வேனலில் தனக்குத் தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும் . கடும் புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை ,சிரசை , சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக் கொண்டு சரியும் . எப்போதாவது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு கருகும் . தனக்குத் தானே நாற்காலி செய்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும் . ...